கே.பி. எங்கள் ஹோட்டலில் கைதானதற்கான அறிகுறி இல்லை: ரியூண் ஹோட்டல் அதிகாரி

விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தாங்கள் நடத்திய சொந்த விசாரணையிலும் சரி தங்கள் சீ.சீ.ரீ.வி. வீடியோ கமெராக்களிலும் சரி பத்மநாதன் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகவோ அங்கு கைது செய்யப்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் ஹோட்டல் பொதுஜன உறவு மற்றும் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் முகாமையாளர் பினேஷ் விறாஜ்லால் தெரிவித்தார்“. ஹேட்டலின் சீ.சீ.ரீ.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் விழுந்திருக்கவில்லை என்றும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். கோலாலம்பூரிலுள்ள ஏனைய ஹேட்டல்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் ஹேட்டலில் அதிக எண்ணிக்கையான சீ.சீ.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் ரியூன் ஹோட்டலில் வாகன தரிப்பிடம் இல்லாததால் கே.பி ஹேட்டல் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் விராஜ்லால் கூறினார்.

கே.பி. தங்கள் ஹோட்டலுக்குள் இல்லை என்பது மலேசிய அரசாங்கத்திற்கு தெரியுமாதலால் அதிகாரிகள் தங்களிடம் அது பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய பொலிஸாரோ அரசாங்கமோ இந்த விவகாரம் தொடர்பாக ஹேட்டலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கே.பி இந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் உள்ளக விசாரணையை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். பத்திரிகைகளில் கடந்த வாரம் செய்தி வெளியாகும் வரை ஹேட்டல் ஊழியர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாதெனவும் அவர் கூறினார். கே.பி. தமது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்க மாட்டாரென்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரியவந்ததாக விராஜ்லால் சொன்னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply