கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்கு நான்கு “றோ” அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்
பாதுகாப்புத்தரப்பினரின் தீவிரகண்காணிப்பு நடவடிக்கைகளினால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான செ.பத்மநாதனிடம் விசாரணை நடத்து வதற்கு நான்கு “றோ” புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர் என தெசிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளைக் கவனத்திற்கொண்டு அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் ஆயுத வர்த்தகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதியினை வழங்குமாறு பல நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு பிரிவுகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினரே இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க சி.ஐ.ஏ. பிரிவு, ரஷ்ய கே.ஜீ.பி. பிரிவு, அமெரிக்க பெடரல் பணியகம், பிரித்தானிய எம்.ஐ. 5 பிரிவு, இஸ்ரேல் மொசாட் பிரிவு, சீன அரச புலனாய்வு பிரிவு ஆகியனவே மேற்படி கோரிக்கைளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கடல் மார்க்கமான ஆயுதக் கடத்தல்கள் தொடர்பான விபரங்கள் கே.பி. யிடம் உள்ளதாக சர்வதேச உளவுப் பிரிவினர் நம்புகின்றன. அதனாலேயே அவரிடம் விசாரணை நடத்த அக்கறை காட்டுகின்றன. இதன் முதற்கட்டமாகவே இந்திய றோ அதிகாரிகள் நால்வர் அடுத்த வாரம் வருகை தரவுள்ளனர். விசாரணைகளின்போது ராஜீவ் படுகொலை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply