ஒரு மணி நேரத்தில் 261 வாகனங்கள் நேற்று மடு பிரதேசத்தினுள் பிரவேசம்

மடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த விசேட ரயில் சேவைகள் நேற்றுக் காலை முதல் ஆரம்பமாகின. முதலாவது ரயில் நேற்றுக் காலை 7.45க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலி ருந்து புறப்பட்டுச் சென்றது. இதேவேளை நேற்று மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒருமணி நேரத்துள்ளேயே 261 வாகனங்கள் மடு தேவாலய பகுதிக்குள் சென்றதாக தேவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகள் அமைச்சர் சரத் குமார குணரட்ண அவரது பாரியார் சகிதம் மடு புறப்பட்டுச் செல்லும் முதலாவது ரயிலில் பயணித்தனர். நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை புறப்பட்டுச் செல்லும் யாத்திரிகர்களுக்கும், ரயிலுக்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன் மடு மாதா மீதான துதிப்பாடல்களும் பாடப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்தும் நேற்று விசேட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. நாளை காலை கொழும்பு கோட்டையிலிரு ந்து காலை 5.45க்கும், 6.05க்கும், 8.45க்கும் பகல் 1.45க்கும் மாலை 4.20க்கும் இரவு 10.00 மணிக்கும் விசேட ரயில்கள் புறப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply