யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் வைத்தியசாலை
யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட கொழும்பிலுள்ள லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு நிகரான சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பது தொடர்பாக வடக்கின் வசந்தம் இடண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரஸ்ரீ தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் வசந்தம் இரண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
80 மில்லியன் ரூபா செலவில் 100 படுக்கை அறைகளுடன் கூடிய இந்த சிறுவர் வைத்தியசாலையை எங்கு அமைக்கலாம் என்பது குறித்தும் ஆளுநர் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திகளுக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்ட ஆளுநர், எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்காக முன் மொழியப்பட்டிருக்கும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி பற்றியும் பேச்சு நடத்தினார்.
இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ், பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி, ஆளுநரின் செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் உள்ளிட்ட பல அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply