மலேசியா இலங்கைக்கு 10 மில்லியன் ரூபா உதவி

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக மலேசிய அரசாங்கம் நேற்று  இலங்கைக்கு 10 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியது.இதற்கான காசோலையை மலேசிய நாட்டுத் தூதுவரான ரொஸ்லி இஸ்மாயில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்காக மலேசிய அரசாங்கம் முன்வந்திருப்பது குறித்து இலங்கை அரசு சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். மலேசிய அரசாங்கம் ஆரம்பம் முதலே இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் அரசியல், பொருளாதார ரீதியான உறவுகள் காணப்படுகின்றன என்றார் வெளிவிவகார அமைச்சர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply