வவுனியா நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களுக்காக ஜப்பான் 117 மில்லியன் நன்கொடை
இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும்; இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குரியோ ரகஹாசி ஜப்பான் அரசாங்கத்தின் சார்பிலும்; இதற்கான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஜப்பான் அரசாங்கம் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் மலசல கூட வசதிகளை செய்து கொடுக்கவென 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு இத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதுடன், செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply