மடுமாதா ஆலயத் திருவிழாவில் இரண்டு லட்சம் மக்கள் பங்கேற்பு
மடு மாதா ஆலயத்தின் ஆவணித் திருவிழா வெகு கோலாகலமாக இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் திருவிழாவில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் மடு மாதா ஆலயத்துக்கு சென்றுள்ளதையடுத்து அங்கு விசேட பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டிருந்தன.
இன்றைய திருவிழா திருப்பலியினை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான ஆயர் குழுவினர் ஒப்புக்கொடுத்தனர். முன்னாள் கொழும்பு பேராயர் ஒஸ்வேல்ட் கோமிஸ், யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரும் இந்தக் கூட்டுத் திருப்பலியில் பங்கேற்றனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் தென் பகுதியிலிருந்து பெரும்பாலான சிங்கள மக்கள் மடு திருத்தலத்துக்கு இம்முறை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply