15 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் ஓமந்தை வருகை : வன்னியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் புலிகளின் கட்டுக்காப்பையும் மீறி வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இன்று (நவ. 23) காலை வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 81 பொதுமக்கள் ஏ-9 வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் கனகராஜன்குளத்தில் உள்ள சின்ன அடம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்தது என நைனாமடுப் பகுதியிலிருந்து வந்த இளைஞர் ஒருவரை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சு சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply