சுதந்திர தின விழா கோலாகலம்-பிரதமர், முதல்வர் கொடியேற்றினர்
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சென்னையில் முதல்வர் கருணாநிதியும் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர். இந்தியாவின் 62வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்,தேசிய கொடியை ஏற்றி வைத்து முப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.விழா நடந்த 90 நிமிடங்களும் அப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. விமானப் படை ஹெலிகாப்டர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன.
முன்னதாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சமாதிகளிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.அதே போல சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி காலை 8.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினரின் கம்பீர அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply