வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி உத்தரவு
மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளைப்; பணித்துள்ளார். நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகப் பெய்த மழை காரணமாக பல பகுதிகளிலும் சுமார் நாலாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களின் வௌ;வேறு பிரதேசங்களில் தாழ்நிலங்களில் வெள்ளம் பரவியது. சில பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைநததுடன் அவ்வப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள்; தெரிவித்தனர்.
இதேவேளை இம்மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இம்மண்சரிவுகள் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply