மாவீரர் நாளன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியிடப்படுமாம்?

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றும் நோக்கில் மும்முனை நகர்வுகளை இலங்கைப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆரம்பித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அக்கராயன்குளம், திருமுருகண்டி, கொக்காவில் ஆகிய பிரதேசங்களில் படையினரின் பல்வேறு பிரிவுகள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னேற முயற்சிக்கும் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முருகண்டிக்கு மேற்காக அறிவியல்நகர் பகுதியில் கடும் சமர் நடைபெற்றிருப்பதாக புலிகள் தரப்புச் செய்திகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தவிரவும், பூநகரி பிரதேசத்திலிருந்து பரந்தன் நோக்கி முன்னேறும் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நல்லூர், மற்றும் உருத்திரபுரம், குஞ்சுப்பரந்தன் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலும் கடும் சமர் நடைபெற்றிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பை மேற்கோள் காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நெருங்கிவரும் நிலையில், கிளிநொச்சி நோக்கிய தமது நகர்வுகளை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவீரர் நாளன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தியை வெளியிடும் எண்ணம் இலங்கை அரசாங்கத் தரப்புக்கு இருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply