புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.இந்திய அரசியலமைப்பின்படி 1967ஆம் ஆண்டின் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை ஆதரித்துப் பேசுதல், அத்தகைய இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் படங்கள், கொடிகள், இலச்சினைகள் என்பவற்றைப் பொது விளம்பரங்களில் உபயோகித்தல், அவற்றை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பித்தல், பிரசுரித்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்களாகும் என குறிபிடப்பட்டுள்ளது.
விடுதலைச் சிருத்தைகள் எனும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளனின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்தே தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் திருமாவளன், தமிழர்களுக்கு தனியான தாய்நாடு குறித்து தொடர்ந்தும் பேசி வருவதோடு புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையையும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply