சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெற இலங்கை மந்திரிகள் ரஷியா பயணம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க ரஷியா மற்றும் கத்தார் நாடுகளிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக இலங்கை மந்திரிகள் 2 பேர் இன்று (திங்கட்கிழமை) ரஷியா செல்கின்றனர்.

இதுபற்றி இலங்கை எரிசக்தித்துறை மந்திரி காஞ்சன விஜேசேகரா கூறுகையில், “2 நாட்களுக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளது. அது அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்காக தேசத்திடம் மன்னிப்பு கோருகிறோம். சலுகை விலையில் கச்சா எண்ணெயை பெறுவதற்கு 2 மந்திரிகள் ரஷியா செல்கிறார்கள். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிப்பார்கள்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply