அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த 54 பேர் கைது

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சட்டவிரோமாக சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று (27) மாலை 3 மணிக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பாலமீன்முடு கடற்கரையில் இருந்து சிறிய படகுகள் மூலம் கிழக்கு கடலில் தரித்து நின்ற இயந்திர படகிற்கு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவுஸ்ரோலியாவுக்கு பறப்பட்டு பிரயாணித்து கொண்டிருந்த இயந்திர படகை கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்ட போது அதில் சட்டவிரோமாக அவுஸ்ரோலியாவுக்கு சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 54 பேரை கைது செய்தனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசங்களை சோந்தவர்கள் எனவும் இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் இழுத்து கொண்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று மாலை 3 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கோண்ட பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply