யாழ். மீசாலை ரயில் நிலையத்தை புனரமைக்கும் பொறுப்பை மத்திய மாகாண சபை ஏற்றது
வடக்கின் வசந்தம் திட்ட பணிகளுக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் யாழ்ப்பாணம் மீசாலைப் புகையிரத நிலையத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து கொடுக்க மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.இந்த அபிவிருத்திப் பணிகளுக்கான எந்த செலவுகளும் மத்திய மாகாண சபை மூலம் திரட்டப்படமாட்டாதென்றும் மாறாக மாகாணத்தின் தனிப்பட்டவர்களினதும் மேலும் தனியார் வர்த்தக நிலையங்களினதும் உதவிகளுடன் இந்த புனரமைப்பு பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் ஐந்தாவது சபை அமர்வு கடந்த 18ம் திகதி பல்லேகலையில் உள்ள மத்திய மாகாண சபையின் மண்டபத்தில் அதன் தலைவர் சாலிய பண்டார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
சபை நடவடிக்கையின் போது அமைச்சுகளின் அறிவிப்புகளும் அமைச்சர்களின் அறிவித்தல்களுக்குமான சந்தர்ப்பமொன்றின் போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உரித்தான ஒரு வேலைத் திட்ட பணியாகும். இந்த வேலைத் திட்டங்களின் முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் மூலமும் அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள மத்திய மாகாண சபை எதிர்பார்ப்பதாகவும் முத லமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply