பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதியினால் புதிய குழு
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் 7 குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் இதனை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாழ்க்கைச் செலவை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை மற்றும் நடைமுறை தீர்வுகள் அந்தக் குழுவின் மூலம் எடுக்கப்பட உள்ளன.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – தலைவர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
மீன்வளத்துறை அமைச்சர்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
விவசாய அமைச்சர்
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் பணிகளுக்கு ஆதரவாக, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் மற்றும் குறித்த அமைச்சர்களின் பங்கேற்புடன் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply