புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் நீக்குங்கள் : செல்வம் அடைக்கலநாதன்
தடைசெய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டது போன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் அரசாங்கம் நீக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தடைசெய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது. டொலர் அதிகமாக வருவதற்காக தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் நீக்க வேண்டும். எமது நாட்டில் முதலீடு செய்ய புலம்பெயர் உறவுகள் தயாராக உள்ளனர். இனவாத ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும்.
கரும்புலி தினத்தில் தாக்குதல் நடத்தப்படலாமென கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியை துரத்தும் போராட்டத்தை மாற்றுவதற்காக இந்தப் புரளி முன்வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் முடுக்கி விடப்படுவார்கள்.போராட்டம் புலிகள் இயக்கத்தின் மீள்உருவாக்கமானது தாக்குதல் நடத்தும் நோக்கிலன்றி ஜனநாயக நீரோட்டத்துடனான வாய்ப்பாக இருக்கும்.புலிகள் பற்றி புரளி எடுபடாது. புரளியை வைத்து புலிகளை தேடுவதை விடுத்து கியூவில் மோசடி செய்வோரை பிடிக்க வேண்டும்.
போக்குவரத்தின்றி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இ.போ.ச. நிரப்பு நிலையங்களில் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாததால் குழப்ப நிலை உருவாகியுள்ளது.
இதனை அமைச்சர் தீர்வு காண வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையங்களில்
வடக்கு, கிழக்கிலுள்ள புலனாய்வு துறைகளையும் முடக்கி விட்டு கியூவிலிருந்து எரிபொருள் பெற்று அதிக விலைக்கு விற்பவர்களை பிடிக்க வேண்டும். எரிபொருள் மாபியாவை நிறுத்த வேண்டும்.
தனியார் நிரப்பு நிலையங்களுக்கு மாதாந்தம் பல எரிபொருள் கொள்கலன்கள் வருகின்றன.
ஆனால் கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு ஓரிரு தடவை தான் எரிபொருள் வருகிறது. இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சருக்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை.
எரிபொருள் வராதென அமைச்சர் அறிவித்த மறுநாள் எரிபொருள் வருகிறது.
இதனால் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply