நாட்டில் 10 சதவீத தனியார் பஸ்களே சேவையில் ஈடுபாடு: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தகவல்
நாட்டில் தற்போது நிலவும் டீசல் நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு முழுவதும் சுமார் 10 வீதம் தனியார் பஸ்களே இயங்கியதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து டிப்போவினூடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்காமல் தனியார் பஸ் தொழிற்துறையை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவிக்கையில், போக்குவரத்து சபை டிப்போவிலிருந்து எரிபொருள் பெறும் சில தனியார் பஸ்கள் அந்த எரிபொருளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply