ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார். ஜப்பானின் மேற்கு நகர பகுதியான நாரா நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருக்கு பின்னாலிருந்து இரு முறை இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும், முதலாவது சூடு அவர் மீது படாத போதிலும் இரண்டாவது சூட்டில் அவர் கீழே வீழ்ந்ததாகவும், இதனைத் தொடர்ந்து அபே இரத்தத்தில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து 67 வயதான அபே அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படு காயமடைந்த அவர் எவ்வித அறிகுறிகளும் இன்றி காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் எனும் வகையில் ஷின்சோ அபே , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கவுன்சிலர் சபை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடம் பொலிஸார் விசாரணைகளைள முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply