புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் மாணவர்கள் தோன்றுகின்றனர்

இலங்கையின் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 5 ஆம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஆறாயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாகக் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழ் மாவட்டத்தி்ல் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 212 மாணவர்கள் இந்தப் பரீட்சை எழுதுவார்கள் என அங்குள்ள கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களைச் சேர்ந்த 5700க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தயராகியிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறுகின்றார்.

இவர்களில் பலருக்கு உரிய தளபாடங்கள் இல்லாத நிலையில் நிலத்தில் இருந்தே பதே பரீட்சை எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாணவர்களுக்கு தடித்த கடதாசி மட்டை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply