இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுக்க முடியாத நிலையில் நாம் தமிழக முல்வர் கருணாநிதி தெரிவிப்பு
எனது அனைத்து சாதனைகளையும் விட இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே பெரும் சாதனையாகக் கருதுகிறேன். இவ்வாறு கூறினார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்த முடியாத பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை என்னால் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமானால் அதுவே எனது வாழ்நாள் சாதனையாகவிருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply