ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு
கடந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 1380 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் பாரிய சம்பவங்கள் தொடர்பான 170 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸா ருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
தகவல் ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: முறைப்பாடுகள் குறித்து செயற்படாதது குறித்து 448 முறைப்பாடுகளும், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக 318 முறைப்பாடுகளும், பக்கசார்பாக செயற்பட்டன தொட ர்பாக 177 முறைப்பாடுகளும், தாக்குதல் நடத்தியது தொட ர்பாக 92 முறைப்பாடுகளும், சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்தது தொடர்பாக 84 முறைப்பாடுக ளும் கிடைத்துள்ளன. பொலிஸ் பிடியில் இறந்தது தொடர்பாக 6 முறைப் பாடுகளும் இதில் அடங்குகின்றன.
இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப் பட்டு உரிய தண்டனை வழங்கப்படும்.கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்யப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸார் தொடர் பில் 238 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்ட பொலி ஸார் தொடர்பாக 232 முறைப்பாடுகளும், காலி மாவட்ட பொலிஸார் குறித்து 161 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்ட பொலிஸார் குறித்து 155 முறைப்பாடுகளும் இதில் அடங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply