ஏ.எல்.அதாவுல்லா தலைமையிலான அக்கரைப்பற்றில் நாளை தேசிய காங்கிரஸின் வருடாந்த மாநாடு
நீர் வழங்கல் அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் வருடாந்த மாநாடு நாளை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. ஜனாதிபதியின் வருகை காரணமாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலதிக பொலிசாரும், இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் தற்போது அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply