கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் அளவில் கொழும்பு வரும்
இந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது. 1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.
மத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது.
எனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply