கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது: பாதுகாப்பு செயலர் கோத்தாபய

தாய்நாட்டை பயங்கர வாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இல ங்கையின் கடற்பரப்பை பாது காக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த வர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல்வழியைப் பயன்படு த்தி மேற்கொள்ளப்படும் முய ற்சிகளை செயலிழக்கச் செய்து கடல் பாதுகாப்பைப் பலப் படுத்தும் பொருட்டு முகாம் கள் மேலும் அதிகரிக்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார். படை நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் சகல செயற்பாடுகளுக்கும் விசேட பங்களிப்புக்களை வழங்கிய

ஜி623 என்ற தாக்குதல் கப்பல் ‘சயுரல’ என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் நேற்று உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையில் நேற்றுக் காலை திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதி யாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கடற் புலிகளையும் அதன் தலைவர்களையும் கடற் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பயன்படுத்தி தாக்கியழித்த பெருமை கடற்படையைச் சாரும். பலமான வளங்களையும் நவீன வசதிக ளையும் கொண்ட நாடுகள் இலங்கை கடற் படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருப்பது இலங்கை கடற்படையின் பலம் மேலும் உறுதியாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவினால் வழங்கப்பட்ட 74.1 மீற்றர் நீளமும், 11.4 மீற்றர் அகலமும் கொண்ட ஜி623 கப்பல் வன்னி மனிதாபி மான நடவடிக்கையின் ஆழ் கடல் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தக் கப்பலை முப்படைகளின் தளபதி யான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சயுரல என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பிரகடனத்தை வழங்கியுள்ளார். கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சுமித் ஆனந்த வீரசிங்கவிடம் பாதுகாப்புச் செயலாளரினால் பிரகடனம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன. கப்பலைச் சென்று பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் அங்கு வழங்கப்பட்ட மரி யாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர். படை நடவடிக்கையின் போது ஈடுபடுத் தப்பட்ட சகல தாக்குதல் படகுகளும் கப் பல்களும் அணிவகுத்து சென்றன. அதனைத் தொடர்ந்து சயுரல கப்பல் வெள்ளோ ட்டத்திற்கு விடப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply