பாசிசம் மனந்திருந்த மாட்டாது என்பதே வரலாறு எமக்குக் கற்றுத் தந்த பாடம் : ஸ்ரீதரன்

பாசிச இயக்கமான ‘புலிகள்’ மனந்திருந்த மாட்டார்கள் என்பது வரலாறு எமக்குக் கற்றுத் தந்த பாடம் என பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொதுச்செயலர் ரி ஸ்ரீதரன் (சுகு) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியாவைப் போன்ற மாநில ஆட்சிமுறையை ராஜீவ் அறிமுகம் செய்தார். இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாநில அரசாங்க முறையை முன்னின்று செயல்படுத்தவற்காக தம்மை அர்ப்பணித்ததற்காகவே பத்மநாபா மற்றும் 12 தோழர்கள் சென்னையில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த மாநில ஆட்சிமுறையை ஒழிப்பதற்காகவும் அன்று முதல்வர் வரதராஜப் பெருமாள் தலைமையில் இருந்த வடக்குக் கிழக்கு மாநில அரசை கலைப்பதற்காகவும் அன்றைய இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் விடுதலைப் புலிகள் கரம்கோர்த்து செயல்பட்டனர்.

இலங்கையிலிருந்து இந்திய அமைதிகாப்புப் படை வெளியேறவேண்டும், இந்தியாவின்
அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாநில ஆட்சி கலைக்கப்பட வேண்
டும் என்பதில் அவர்கள் மதி விதி தெரியாமல் நடந்து கொண்டனர். அன்று விடுதலைப்
புலிகள் விதைத்த வினையின் பயனையே இன்று ஈழத்தமிழர்கள் அனுபவித்துக் கொண்
டிருக்கின்றனர்.

மகாகவி பாரதி வார்த்தையில் கூறுவதானால் நல்லதோர் வீணை செய்து நலங்கெட புழுதியில் எறிந்து விட்டோம். ராஜீவ் முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று வாழ்விடம் 19 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் கோர்ட் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டுவிட்டது. அன்று புத்திசாலித்தனமாக தமிழர்கள் நடந்துகொண்டிருந்தால் இன்று ஈழத்தமிழர்கள் ஒரு முழமையான மாநில அரசை நிர்வகிப்பவர்களாக இருந்திருப்போம்.

தமிழர்கள் மத்தியில் இருந்த ஆற்றலும் திறமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் தலைவர்கள் 30 ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். இதில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் விடுதலைப் புலிகளாலேயே கொல்லப்பட்டனர். மாற்று அரசியல் கட்சிகள் இயக்கங்களின் போராளிகள் மாற்றுக் கருத்துக் கொண்ட கல்வியாளர்கள் சாதாரண பொதுமக்கள் என பல ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழர்களின் ஜனநாயக தலைவர்களும் அறிவார்ந்த மனிதர்களும் அழிக்கப்பட்டதால் ஈழத் தமிழர் சமூக கட்டமைப்பு சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் ஒரு கட்டமாக சம~;டி முறையிலான அதிகாரப் பகிர்வு திட்டமொன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகளால் பரிந்துரைக்கப்பட்டது. அதையும் விடுதலைப் புலிகள் நிராகரித்துவிட்டனர். மக்களின் நிலையில் இருந்து ஆக்கபூர்வமாக சிந்திப்பது அவர்களின் அகராதியில் கிடையாது. இன்று ஈழத்தமிழர் வாழ்வில் அமைதி திரும்ப யுத்தநிறுத்தமும் புலிகளுக்கும் அரசுக்கும் பேச்சுவார்த்தையும் நிகழ வேண்டுமென தமிழகத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன.

யுத்தத்தை மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. என்ன
விலை கொடுத்தாவது சமாதானம் வரவேண்டும். துரதிஷ்டவசமாக யுத்தநிறுத்தக் காலங்களை விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலைகளை மேற்கொள்வதற்கே பயன்படுத்தி
வந்திருக்கின்றனர்.

பல நூற்றுக்கணக்கானவர்கள் மாற்றுக் கட்சிகளின் உறுப்பினர்கள் மனித உரிமைவாதிகள் நோர்வே சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். எனவே பேச்சுவார்த்தை என்று வரும்போது எஞ்சியிருக்கும் மாற்றுக்கட்சியினரும் அக்கட்சிகளின் ஆதரவாளர்களும் சுதந்திர சிந்தனையாளர்களும் கொல்லப்படுவர் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பேச்சுவார்த்தை காலங்களில் புலிகளால் இலங்கையில் சுதந்திரமாக நடமாட முடியும்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமது பிஸ்டல் குழுக்களையும், தற்கொலைப் படையையும் கிளேமோர்க் குண்டுகளை கையாள்பவர்களும் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். எங்கும் ரத்தவிளாறாகிறது. இதுவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்த காலத்தின் நிஜம்.

எனவே, இதயபூர்வமான யுத்த நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையும் விரும்பும் தமிழக
தலைவர்கள், இப்பேச்சுவார்த்தை காலத்தில் ஒரு குண்டும் வெடிக்காமல் இருப்பதற்கும்,
அச்சுறுத்தப்படாமல் இருப்பதற்கும், கடத்தப்படாமல் இருப்பதற்குமான உத்தரவாதம்
பெறப்பட வேண்டும்.

ஒரு பாசிச மனநிலை கொண்ட விடுதலைபபுலிகள் இயக்கத்திடமிருந்து இவ்வாறான உத்தரவாதத்தை பெறமுடியுமா?

அது நடைமுறை சாத்தியமாகுமா என்பதற்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
பாசிச இயக்கம் மனம் மாறுவதில்லை என்பது வரலாறு எங்களுக்குக் கற்றுத்தந்த
பாடம். பிரிவினை என்பது இலங்கையில் சாத்தியமில்லை: பூகோள அரசியல் யதார்த்தங்களும் அவ்வாறானதல்ல.

இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் 15 லட்சம் இந்திய
வம்சாவளித் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இனரீதியான பிரச்சனைகள் உண்டு. இவர்கள் உட்பட வடக்கு கிழக்கு தமிழர்களிலும் கணிசமானோர் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே, இலங்கை பவுத்த சிங்கள நாடு என்பதற்குப் பதிலாக, பல இனங்களின் நாடாக மத,இன சார்பில்லாத ஓர் இந்தியா மாதிரியாக மாற்றப்படவேண்டும். அதற்கு ஆக்கபூர்வமான முறையில் தமிழக தலைவர்களும், தமிழக் மக்களும் பங்களித்திட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply