ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பத்மநாதனிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்த மத்தியப் புலனாய்வுத் துறையான சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக சிபிஐ கேள்விகளைத் தயார் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கண்காணிப்பு ஆணையத்துக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பத்மநாதனிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நிதி உதவி அளித்ததாக பத்மநாதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து இலங்கை ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply