வன்னியிலும் மட்டக்களப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

வன்னியிலும் மட்டக்களப்பு- கோரக் கல்வி மடுவிலும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37 மற்றும் 273 ஜொனிகுண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் மீட்டெடுத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் வவுனியா, விளானிக்குளம் மற்றும் பிலும்திகுளப் பிரதேசங்களில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது 864 மிதிவெடிகளையும், 15 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்று இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளையும் அதற்குரிய இரு மெகஸின்கள், மற்றும் 18 ரவைகளையும் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசங்களிலும் மட்டக்களப்பிலும் மீட்கப்பட்ட ஆயுதங்களினதும், வெடிபொருட்களினதும் விபரம் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், வன்னியில் விஸ்வமடு, வெள்ளமுல்லி வாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டுக்குளம் மற்றும் மட்டக்களப்பு கோரக்கல்லிமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தேடுதல்களை மேற்கொண்டனர். இத்தேடுதல்களின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37, கைக்குண்டுகள் 14, ஆர். பி. ஜி௬, ரி௫6 ரக துப்பாக்கிகள்௩, அதற்குரிய மெகஸின் ௧, ரவைகள் 15, அருள்குண்டுகள்௨, பொறிவெடி ௧, உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply