திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply