இலங்கைக்கு Americares அமைப்பிடமிருந்து ரூ. 28 கோடி பெறுமதியான மருத்துவ பொருட்கள்
உலகின் முன்னணி இலாப நோக்கற்ற, மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமான Americares, இலங்கைக்கு 773,000 டொலர் பெறுமதியான (சுமார் ரூ. 28 கோடி) மருத்துவ உதவியை கையளித்துள்ளது.
இது தொடர்பில், அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Americares தூதரகம் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் கீழ், உலகின் முன்னணி இலாப நோக்கற்ற மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Americares, 773,000 USD இற்கு அதிகமான மருத்துவ உதவிகளைள நன்கொடையாக அளித்துள்ளது.
இதன் பெறுமதி இலங்கை ரூபாவில் சுமார் 28 கோடியாகும் (ரூ. 279,476,100.28).
இந்த நன்கொடையானது இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவையாக உள்ள, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டல் விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்கள், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள எளிதாக்கவும், எதிர்கால நன்கொடைகளை பெறுவதற்கு உதவும் வகையிலும் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் Americares நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் Americares நிறுவனத்தின் பிரதி மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருக்கிடையில் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வ சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சர்வதேச உதவி மற்றும் மருந்து பொருட்கள் நாட்டிற்கு மிக அவசியமாக காணப்படும் இவ்வேளையில், இலங்கை மக்களும் இலங்கை தூதரகமும் இவ்வாறான தாராள முயற்சிகள் மற்றும் தேசத்திற்கு உதவும் அர்ப்பணிப்பு தொடர்பில் Americares இற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளது. .
Americares என்பது ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும். இது வறுமை அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதோடு, அவர்களது சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. இவ்வமைப்பு வாழ்க்கையை மாற்றும் சுகாதார திட்டங்கள், மருந்து, மருத்துவ பொருட்கள், அவசர உதவிகளுடன் வருடாந்தம் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 85 நாடுகளை சென்றடைகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது முதல், அமெரிக்கா உட்பட 164 நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை Americares வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply