“ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளது” : ஜோ பைடன் ஆவேசம்

மேற்குலக நாடுகள் அணு ஆயுத மிரட்டல் விடுத்தால் எதிர்த்துத் தாக்க தங்களிடமும் ஆயுத பலம் இருப்பதாக நேற்று ரஷிய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் விதமாக படைகளை அணிதிரட்ட அவர் உத்தரவிட்டது உலக அரங்கில் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் பொது அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புகளை பொறுப்பற்ற முறையில் புறக்கணிக்கும் வகையில், புதின் ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஐ.நா.வின் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக தெரிவித்த பைடன், அதனால் தான் ஐ.நா. பொதுச்சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply