எப்போது முகாம்களில் உள்ள ஏனைய மக்களும் விடுவிக்கப்படுகின்றார்களோ அன்று தான் மகிழ்ச்சியடைய முடியும் விடுவிக்கப்பட்ட இந்து மதகுரு
வவுனியா இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தங்களுக்கு இந்து மத குருமார்களுக்குரிய வசதிகள் செய்து தரப்பிட்டிருந்ததாக முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் விநாயகர் ஆலய பூசகரான மயில்வாகனம் மகேந்திர குருக்கள் கூறுகின்றார். தற்போது மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருந்த முகாமில் விநாயகர் ஆலயமொன்று அமைக்கப்பட்டு வழிபாட்டிற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்டப்டிருந்தமையினால் தமது நித்திய கர்மங்களை செய்வதற்கு அது உதவியாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றார்.
முகாமிலிருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சி என்று கூறுவதற்கு இல்லை என்றும் அங்கு தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ள ஏனைய மக்களும் விடுவிக்கப்படும் போது தான் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறுகின்றார்.
வன்னி பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயங்கள் பூசைகள் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து கவலையடைந்துள்ளதாகக் கூறும் அவர் அந்த பிரதேசத்தில் மீள் குடியேற்றம் இடம்பெறும் வரை மட்டக்களப்பிலிலே தங்கியிருந்து ஆலயமொன்றில் பூசகராக பணியாற்ற பலருடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply