புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மலேஷியாவில் தொழில்வாய்ப்பு

விடுதலை புலிகள் இயக்கத்தில் சிறுவர் படைப் பிரிவில் இருந்து சரணடைந்தவர்களில் ஏழு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மலேசியாவில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு மலேசியா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்களும் விசாக்களும் நேற்று பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டன. விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்து செயலாற்றி அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 147 இளைஞர்கள் இதற்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் புனர்வாழ்வளிப்பதற்காக இன்னும் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் 10,000 பேர் வரையில் இருப்பதாக புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply