ஜி20 மாநாட்டில் அதிபர் பைடன் சவுதி இளவரசரை சந்தித்துப் பேசும் திட்டம் இல்லை : அமெரிக்கா அறிவிப்பு
சவுதி அரேபியா, ரஷியா அங்கம் வகிக்கும் ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. இதனால் 75 டாலராக இருந்த ஒரு பேரல் தற்போது 90 டாலரை நெருங்கியுள்ளது.
இது ஏற்கனவே பணவீக்க பிரச்னையில் உள்ள அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஒபெக்கின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி மீது அமெரிக்கா கோபமடைந்துள்ளது. இதற்கிடையே, இந்தோனேசியாவின் பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் சவுதி இளவரசரைச் சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply