வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான யுவதி பலி
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை இனந்தெரியாதோர் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா, நெடுங்கேணி – சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீது குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply