டிரோன் தாக்குதல் விவகாரம் ஈரானுடன் தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் முடிவு
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரில் தற்போது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கிடையே உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த டிரோன்கள், ஈரானில் தயாரிக்கப்பட்டதாகும். காமிகேஸ் என்று பெயரிடப்பட்ட ஈரான் டிரோன்கள் மூலம் உக்ரைனில் குடியிருப்பு பகுதிகள், மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீர் விநியோக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ரஷியாவுக்கு வழங்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுடனான தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் ஆலோசித்து வருகிறது.
உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா கூறும்போது, “உக்ரைனில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் டிரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். உக்ரைனுடனான உறவுகளை அழித்ததற்கு ஈரான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டிக்கும் முன் மொழிவை உக்ரைன் அதிபரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
உக்னிரையர்களை கொல்ல ரஷியாவுக்கு உதவியதற்காக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறோம். ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது இப்போது மிகவும் பொருத்தமானது. ஈரானின் நடவடிக்கைகள் மோசமானவை. வஞ்சகமானவை. அவர்கள் (ஈரான்) போரை ஆதரிக்கவில்லை என்றும், எந்த தரப்பினரையும் தங்களது ஆயுதங்களால் ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறி இருந்தனர்.
ஆனால் அரை அவர்கள் மீறி விட்டனர் என்றார். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது கடந்த 10-ந்தேதி முதல் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. தொடர் தாக்குதல்களால் ரஷிய அரசுடனான பேச்சு வார்த்தைக்கு இனி இடமில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply