டிசம்பர் ஜனவரியில் பொருட்களின் விலைகள் குறையலாம் : மத்திய வங்கி ஆளுநர்
பணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் எனவும்தெரிவித்துள்ளார். பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம் என கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடிக்குதீர்வை காண்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 69.8 வீதமாக அதிகரித்து காணப்பட்டது, இது இலங்கை முன்னொhருபோதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கி எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த நிலை மாறும் ஒக்டோபரில் பணவீக்கம் குறைந்தால் அந்த போக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வட்டி வீதங்களை அதிகரிப்பது இடைநிறுத்தப்பட்டமை நீடிக்குமா என்பது குறித்து மத்திய வங்கி ஆளுநர் எதனையும் தெரிவிக்கவில்லை.
நாங்கள் பணவீக்கத்தை மாத்திரமல்ல எதிர்கால நிலை எதிர்பார்ப்புகள் பணவியல் விரிவாக்கம் வளர்ச்சிக்கண்ணோட்டம் போன்றவற்றையும் ஆராயவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் வங்கிகள் வீதங்களை உயர்வாக வைத்திருக்கவேண்டும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இது அவசியம் டிசம்பர் ஜனவரியில் விலைகள் குறைவடையலாம் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply