முதலமைச்சரின் பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை குறைப்பு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவலர் என்ற வகையில், பாதுகாப்பிற்காக போக்கு வரத்தை சீர் செய்ய நிற்பது வழக்கம். காவலர்களுடன், போக்கு வரத்து காவலர்களும் பணியில் ஈடுபடுவார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி புறப்படும் போது, அவர் செல்லும் பாதையில் சில மணி துளிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, எளிதில் கான்வாய் வாகனம் செல்ல வழிவகை செய்யப்படுவதோடு, எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் வழக்கமாகவே செல்லும்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சாலை பாதுகாப்பிற்காக நிற்கக் கூடிய காவலர்களின் எண்ணிக்கை வெகு அளவில் குறைக்கப்பட்டுள்ள தோடு, முக்கிய சந்திப்புகளில் மட்டும் கான்வாய் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை சீர்செய்ய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவ தோடு, கான்வாய் செல்லும் நேரத்தில் மட்டும், கிரீன் சிக்னல் போடப்பட்டு எளிதில் வாகனம் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆழ்வார்பேட்டையில் இருந்து தலைமை செயலகம் வரை 60 சந்திப்புகளில் காவலர்கள் நிற்பது வழக்கம். இதனை குறைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதின் பேரில் அது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply