காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது : சரத் வீரசேகர
இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார்.
13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குருந்தூர் மலையில் பௌத்த விகாரையும், வடக்கில் புத்தர் சிலையையும் ஸ்தாபிக்க தடையாக உள்ள 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply