சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம்: போப் பிரான்சிஸ்

வாடிகன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள். ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை தேவைக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிற்றின்ப ஆபாசத்திற்காக அவற்றை பயன்படுத்தக்கூடாது. உங்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை நீக்குங்கள். எனவே உங்கள் கையில் சலனம் இருக்காது. இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply