பிரபஞ்ச அழகி போட்டி நடத்தும் நிறுவனத்தைவாங்கிய திருநங்கை தொழில் அதிபர்
மிஸ் யுனிவர்ஸ் என்ற பிரபஞ்ச அழகி போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.165 கோடி) தாய்லாந்து பிரபல ஊடக அதிபரும் திருநங்கையுமான ஜகாபோங் வாங்கி உள்ளார்.
தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கும் ஜேகேஎன் குளோபல் குழுமத்தின் தலைவர் அன்னே ஜகாபோங் ஜக்ரஜுதாடிப் இவர் ஒரு திருநங்கை ஆவார். பிரபலமான ரியாலிட்டி ஷோக்களான புராஜெக்ட் ரன்வே மற்றும் ஷார்க் டேங்க் ஆகியவற்றின் தாய்லாந்து தொடர்களில் இவர் நடித்துள்ளார். ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்ப் இதில் பங்குதாரராக இருந்தார்.
அடுத்த ஆண்டு முதல் திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் பட்டத்துக்காக போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டுமே போட்டி முன்பு அனுமதிக்கப்பட்டது.இந்தப் போட்டி 71 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு 160க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply