திஸ்ஸாநாயகத்தை விடுதலை செய்யக் கோரி மதுரை ஊடகவியலாளர் சங்கம்
ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மதுரை ஊடகவியலாளர் சங்கத்தினர் (MUJ) தென்னிந்தியாவுக்கான இலங்கைப் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வறிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டமை தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையையும் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸாநாயகத்தை சிறையிலிருந்து விடுவிக்கவோ அல்லது பிணையில் விடுதலை செய்யவோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், அது தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்தும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் பிரதி உயர் ஸ்தானிகரிடம் மேற்படிச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
மதுரை ஊடகவியலாளர் சங்கத்தினர் கையளித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக கிருஷ்ண மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply