உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர் : அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply