யாழ்.பருத்தித்துறை கடல் பகுதியில் பதிவான அரிய காட்சி

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை கடல் பகுதியில் நேற்று (30) இயற்கையின் அரிய காட்சியொன்று இடம்பெற்றுள்ளது.யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கன மழைபெய்து வந்த நிலையில், வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி கடல் நீரை மேலே எடுக்கும் அரிய காட்சி பதிவாகியுள்ளது.

இது ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சுழல் காற்றாகும். இந்த அரிய காட்சியானது குறித்த கடற்பரப்பில் சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

குறித்த காட்சியை ஏராளமானவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

திரண் முகல்களிலிருந்து தோற்றம் பெற்று கீழ் நோக்கி மூர்க்கத்தனமாக சுழன்று வீசுகின்ற காற்றினையே ரொனாடோ என்பர். இது முகில்களிலிருந்து கீழ் நோக்கி வரும் போது புனல் வடிவத்தில் தோற்றமளிக்கும் நிலப்பகுதியில் இச்சுழல் காற்றின் விட்டம் ஏறக்குறைய 100 மீற்றர்களாகும். இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 160 – 480 கிலோ மீற்றர் என்ற அளவில் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply