ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு திட்டத்திற்கு ஒப்புதல்

ஜேர்மனி 49 யூரோ பயணச்சீட்டு திட்டத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்துகிறது.மத்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஜேர்மனியின் கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் புதன்கிழமையன்று நுகர்வோர் மீதான நிதி அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைத்து, அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க குடிமக்களுக்கு உதவும் நோக்கத்துடன், ஜேர்மனியில் ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் ($48) நாடு தழுவிய போக்குவரத்து டிக்கெட்டை ஜனவரி முதல் அறிமுகப்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

Deutschlandticket என்று அழைக்கப்படும் இந்த பயணசீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த சுமார் 3 பில்லியன் யூரோக்கள் செலவாகும். இதற்கு கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் நிதியளிக்கும்.

மேலும், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் பணியாளர்களின் செலவுகளை சமாளிக்க ஆண்டுக்கு ஒரு பில்லியன் யூரோக்கள் கூடுதலாக வழங்குவதாகவும் ஜேர்மன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

49 யூரோ மாதாந்திர போக்குவரத்து டிக்கெட், பயணிகள் நாடு முழுவதும் குறுகிய மற்றும் நடுத்தர தூர பொது போக்குவரத்தை குறைந்த செலவில் பயன்படுத்த உதவும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply