திருமலையிலிருந்து 880 மா மூடைகளுடன் கொழும்பு வந்த லொறி குருநாகலில் மாயம்
திருகோணமலையிலிருந்து 880 மா மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த லொறியை குருநாகல் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத குழுவினர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையிடப் பட்ட மா மூடைகளின் பெறுமதி 18 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
லொறியின் சாரதி கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-
திருமலையிலிருந்து மா மூடைகளை ஏற்றி வந்துகொண்டிருந்த லொறியை குருநாகல், கதுருகஸ் சந்தியில் வைத்து இரவு 10.00 மணியளவில் வான் ஒன்றில் வந்த குழுவினர் வழிமறித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர். சாரதியுடன் லொறியை எடுத்துச் சென்றவர்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் சாரதியை கடுமையாக தாக்கி கீழே வீசிவிட்டு லொறியை எடுத்துச் சென்றுள்ளனர்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான லொறியே இவ்வாறு மாயமாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply