இதய சுத்தியான மனமாற்றமே இன்றைய சூழ்நிலையில் தேவை

முப்பது வருட கால ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டு, தனி நாடென்ற மாயை கலைந்ததன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் நேற்று முன்தினம் மேற்கொண்ட சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன் றரை மாதங்கள் கடந்துவிட்ட இந்நிலையில், யுத் தப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பாக தமிழ் தேசி யக் கூட்டமைப்பு இதுவரை பொறுப்புணர்வுடன் செயற்படவில்லையென்பது பாதிக்கப்பட்ட மக்க ளுக்குக் கூட நன்கு புரியும்.

இடம்பெயர்ந்த மக் களை மீளக்குடியேற்றி வட மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் துரித திட்டத்துக்கு ஒத்துழைப்புக் கோரும் வகையில் அரசாங்க தரப்பிலிருந்து விடு க்கப்பட்ட அழைப்புகளையும் தமிழ் தேசிய கூட் டமைப்பு எம்.பிக்கள் பொருட்படுத்தியதில்லை.

யுத்தம் முடிவுற்றதிலிருந்து அப்பிரதேச மக்கள் நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்ட காலம் வரையான நெருக்கடி வேளை யிலும் கூட அம்மக்களின் துன்பங்களில் கூட்டமை ப்பு எம். பிக்கள் பங்கெடுத்துக்கொள்ளத் தவறி விட்டனர்.

பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த நாள் தொடக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்தவர்களென் பதை மக்கள் நன்கறிவர். புலிகள் தோற்கடிக்கப் பட்டதையடுத்து, எத்தகைய தீர்மானத்தின் அடிப்ப டையில் இயங்குவதென்ற திண்டாட்ட நிலைமை யும் கூட்டமைப்பினரின் மக்கள் மீதான அக்கறை யின்மைக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் பல்வேறு மனச்சுமைகளுடன் தற்காலிகத் தங்குமி டங்களில் மூன்றரை மாதங்களாக வாழ்ந்து வருகி ன்றனர். நிவாரணக் கிராமங்கள் நிரந்தரமான வாழ் விடங்களல்ல….

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றி மக்களை மீளக்குடியேற்றுவதற்கு அரசாங்கம் விரிவான திட் டங்களை செயற்படுத்தி வரும் இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தற்போது ஏற் பட்டிருப்பது உண்மையான மனமாற்றமானால் அது வரவேற்கத்தக்கது.

காலம் கடந்த பின்னராவது கூட்டமைப்பு எம்.பிக் களிடம் இத்தகைய காலோசிதமான மனமாற்றமொ ன்று ஏற்பட்டிருக்குமானால் அதனை அநுகூலமான கண்ணோட்டத்துடன் நாம் நோக்குவது இன்றைய சூழலில் அவசியம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளும ன்றப் பிரதிநிதிகளில் பெரும்பான்மையாக உள் ளோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அம்மக்களின் துன்ப துயரங்கள் தொடர்பாக சுய சிந்தனையுடன் முடி வெடுத்து செயலாற்ற வேண்டிய பாரிய பொறு ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் கொண்டுள்ளனர்.

நீண்ட கால யுத்தம் முடிவடைந்துள்ளதையடுத்து வடக்கு, கிழக்கு மக்கள் தூரதிருஷ்டியான முடிவெ டுத்து செயற்பட வேண்டிய காலகட்டமொன்று உருவாகியிருக்கும் இத்தருணத்தில் கூட்டமைப்பி னர் தற்போது கொண்டுள்ள பொறுப்பானது முன் னரை விட மேலும் அதிகமானதாகும். எனவே தான் ஜனாதிபதியுடன் அவர்கள் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தை சிறந்த பலாபலன்களைத் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டு ள்ளது.

அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்கு ஆயுதப் போராட்டமென்பது மார்க்கமல்ல என்ற யதார்த்தம் நன்கு உணரப்பட்டுள்ள இவ் வேளையில் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதே இன்றுள்ள பிரதான பணியாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்றப் பிரதி நிதிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பும் விருப்பத்தையே அரசாங்கம் கொண்டுள்ளது.

வடக்கு அபிவிருத்தியைப் பொறுத்த வரை கூட் டமைப்பின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெரிதும் எதிர்பார்க்கிறது. யுத்தத்தினால் மிக மோசமாக சீரழிந்து போயுள்ள வன்னிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கி அரசு டன் இணைந்து பணியாற்றுவதற்கு தமிழ் தேசி யக் கூட்டமைப்பினர் முன்வருவார்களேயானால் அதுவே அரசின் குறிக்கோளுக்குப் பெரும் பல மாக அமையுமென்பது உண்மை.

நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக உள்ள தாக ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கூட்ட மைப்பு எம்.பிக்கள் தெரிவித்திருக்கின்றனர். நாட் டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படு த்துவதற்காக அரசுடன் இணைந்து செயலாற்றப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கூட்டமைப்பினரின் கூற்று இதயசுத்தியானதாக இருக்குமானால் வடக்கு, கிழக்குக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்குமே அவர்களது எதிர்கால செயற் பாடு மிகுந்த பயன் தருமென்பதில் சந்தேகமில்லை.

முப்பது வருடகால இருண்ட யுகத்திலிருந்து நாடு மீட்சி பெற்றுள்ளது. கடந்து வந்த காலத்தைக் கிளறுவதால் நன்மைகள் ஏற்படப்போவதில்லை. புதிய சிந்தனைகள், அணுகுமுறைகளே இனிமேல் அவசியமாகின்றன. ஐக்கியமும், பொருளாதார பலமும் கொண்ட நாடாக இலங்கையை உலகில் உயர்த்துவதற்கு மனமாற்றங்களும் பெரிதும் முக்கியம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply