யாழ். கோட்டை புனரமைப்பு : இராணுவம் நடவடிக்கை
யுத்தத்தினால் சேதமடைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் இராணுவம் அதனைப் புனரமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீசர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்துப் புனரமைத்தனர்.1990ஆம் ஆண்டு இராணுவத்தினரிடமிருந்து இக்கோட்டையை விடுதலைப் புலிகள் மீட்டனர்.
பின்னர் புலிகள், போர் நடவடிக்கைகளுக்குப் படையினர் பயன்படுத்த முடியாதவாறு இக்கோட்டையை மாற்றி அமைத்திருந்தனர். இங்கிருந்துதான் புலிகள் படையினருக்கு எதிரான பல தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த யுத்த நடவடிக்கை காரணமாக யாழ். கோட்டை பாரிய சேதத்துக்குள்ளானது. புராதன நினைவுச் சின்னங்களும் போரின்போது சேதமாகின.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றியமைக்கும் நோக்கில் இங்கு இப்போது புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply