நீர்கொழும்பு வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்த பெண், அதே வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த பெண் நீர்கொழும்பு – அலுத்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த பெண் கடந்த 14 ஆம் திகதி வயிற்று நோ காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று சனிக்கிழமை காலை தங்கியிருந்த விடுதியிலிருந்து ஓடிச்சென்று, 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
கட்டடத்தின் தரைத்தள வளாகத்தில் விழுந்த குறித்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply