வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து ஒரு தொகுதியினரை வெளியில் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்
வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 74 பல் கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஒரு தொகுதியினர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த அரச சிவில் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கே இவர்கள் செல்கின்றார்கள். இது வரையில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சொந்த இடங்களுக்கும் உறவினர்களிடம் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முகாமில் உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply